#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதலுக்கு பச்சிளம் பிஞ்சை பலிகொடுத்த 19 வயது இளம் தாய்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
கடலுர் மாவட்டத்தில் உள்ள மூளியூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரின் மனைவி பிரியா (வயது 19). தம்பதிகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்து, 11 மாதமான கலையரசன் என்ற கைக்குழந்தை இருக்கிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (வயது 23). பிரியா - ஜெயசூர்யா இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைக்குழந்தையுடன், கள்ளக்காதலன் ஜெயசூர்யாவுடன் ஓட்டம் பிடித்தார். இவர்கள் கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், திருரூர் பகுதிக்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் ஜெயசூர்யாவின் தந்தை குமார், தாய் உஷாவும் இருந்தனர்.
இதேபகுதியில் பிரியாவுடைய உறவினர் சிலம்பரசன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று எதார்த்தமாக பிரியா - ஜெயசூர்யா ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். அச்சமயம் குழந்தையை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிலம்பரசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் பிரியா - ஜெயசூர்யா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னே குழந்தையை கொலை செய்து, பேக்கில் வைத்து திருச்சூர் இரயில் நிலைய ஓடையில் வீசியதும் தெரியவந்தது.
அதிகாரிகள் நிகழ்விடத்தில் நடத்திய சோதனையில், எலும்பும்-கூடுமாக உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையை அரங்கேற்றிய பிரியா, ஜெயக்குமார், அவர்களுக்கு உடந்தையாக இருந்த குமார், உஷா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.