மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளை சீரழித்த கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய பெண் சாராய வியாபாரி.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.. விசாரணையில் பேரதிர்ச்சி.!
தனது கள்ளக்காதலன் மகளை சீரழித்து கர்ப்பமாக்கியதால், ஆத்திரமடைந்த பெண் சாராய வியாபாரி தனது கூட்டாளிகளோடு சேர்ந்து ஆட்டோ ஓட்டுனரை போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிவமணி. இவர் அப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிவமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதில்லை செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி வனிதா கைது செய்யப்பட்டார். அவர் சிவமணியை கொலை செய்தது உறுதியானது. கொலைக்கான காரணமாக வனிதா அளித்த வாக்குமூலம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வனிதாவுக்கும் - சிவமணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், சிவமணிக்கு வனிதாவின் மகளின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளகாதலியின் மகளை காதல் வலையில் வீழ்த்திய சிவமணி, ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமாகியுள்ளார். மகளின் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து விசாரித்தபோது சிவமணியின் விபரீத செயல் வனிதாவுக்கு தெரியவந்தது. தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து கொண்டு மகளை சீரழித்தது வனிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திஉள்ளது.
இந்த தகவலை தனது கூட்டாளிகளிடம் தெரிவித்து வனிதா ஆதங்கப்பட்டு நிலையில், அவர்களின் உதவியுடன் சிவமணியை வனிதா கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வீசிவிட்டு தப்பி சென்றுவிடவே, காவல் துறையினரின் விசாரணையில் அனைத்தும் அம்பலமாகியுள்ளது. விசாரணைக்கு பின்னர் வனிதாவை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.