#அப்பா: வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்ணுக்கு பளார் விட்ட மணமகன்.. பெண்ணின் தந்தை தரமான சம்பவம்.!



Cuddalore Panruti Marriage Stopped by Bride Father Groom Slap Bride Reception Dance

மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்ணை அவரின் தந்தை கண்முன்னே பளாரென கன்னத்தில் அறைய, ஆவேசமடைந்த தந்தை செய்த தரமானம் செய்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டியில் சொந்தமாக தொழில் செய்து வரும் நபரின் மகளுக்கும், அங்குள்ள காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடியவாறு மண்டபத்திற்குள் வருகை தந்த நிலையில், இதனால் ஆவேசமடைந்த மணமகன் மணமகளிடம் தகராறு செய்துள்ளார். மேலும், மணப்பெண் - மணமகன் வீட்டார், நண்பர்கள் முன்னிலையில் மணப்பெண்ணுக்கு பளார் என அறைவிட்டார். 

Cuddalore

இதனால் பெரும் ஆத்திரமடைந்த மணப்பெண்ணும் சுற்றும் சூழ மணமகனுக்கு பளார் விட்ட நிலையில், அங்கு கலவரம் உருவாகியுள்ளது. மகளை கண்முன் அடிப்பதை கண்டு பெரும் ஆத்திரத்திற்கு சென்ற பெண்ணின் தந்தை, மணமகனின் சட்டையை பிடித்து திருமணத்திற்கு முன்னரே இப்படியென்றால், திருமணம் நடந்தால் என்னவெல்லாம் கொடுமை செய்வாய்? என்று கேள்வி கணைகளை எழுப்பினார். 

அதனைத்தொடர்ந்து, மணமகளின் தந்தை தனது உறவினர்களுடன் கூடிப்பேசி திருமணத்தை நிறுத்தி மணமகனின் சட்டையை பிடித்து வெளியே அனுப்பாத குறையாக அனுப்பி வைத்துவிட்டு, குறித்த முகூர்த்த தேதியில் செஞ்சியை சேர்ந்த உறவுக்காரரின் மகனுக்கு தனது மகளை கரம்பிடித்து கொடுத்தார்.