மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ வீட்டுக்கு வந்தா கையெழுத்து; விதவை பெண்ணிடம் அத்துமீற முயற்சித்த VAO.. ஆடியோ லீக்.. பரபரப்பு சம்பவம்.!
தனியாக வசித்து வரும் கைம்பெண்களை குறிவைத்து, அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த நினைத்த VAO செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, உறையூர் கிராமத்தை சேர்ந்த 47 வயது பெண்மணி கணவரை இழந்து வசித்து வருகிறார். இவர் தனது கணவரின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை இருப்பதை அறிந்துள்ளார்.
அந்த பிழையை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார். அங்கு VAO-வாக பணியாற்றி வெங்கடாசலம் என்பவர், பெண்ணை வீட்டிற்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பதறிப்போன பெண்மணி அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன்பின்னர் வெங்கடாசலத்திடம் பெண்மணி கையெழுத்து கேட்க, சல்லாப எண்ணம் கொண்ட வெங்கடாசலம், "நீ பண்ரூட்டி வந்தால் நான் உன்னை அழைத்து வருவேன். இன்று நீ வாயேன். நீ வாந்தால் மட்டுமே போதும். நான் ஒரு மாதம் கழித்துதான் அலுவலகத்திற்கு வருவேன்" என்று கூறி பாலியல் தொல்லை அளித்து இருக்கிறார்.
வெங்கடாசலத்தின் பாலியல் தொல்லை தொடரவே, ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி ஆடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை ஏற்ற காவல் துறையினர் மதுபோதையில் பெண்களிடம் சல்லாபத்தை தொடரும் வெங்கடாசலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், வெங்கடாசலம் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.