#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
மேம்பால பணிகளில் சோகம்; கட்டுமான தொழிலாளி பாலத்தில் இருந்து தவறி விழுந்த பிலி.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூண்டியாங்குப்பம் பகுதியில் சாலை வழி மேம்பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள மலடா மாவட்டம், பிஸிலி பகுதியை சேர்ந்த நபர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர்.
வடமாநில தொழிலாளி:
அவ்வாறாக பணியை மேற்கொண்டு இருந்த வடமாநில தொழிலாளி காபிர் உசேன் என்பவரின் மகன் அபுகலாம், திடீரென தவறி கீழே விழுந்தார்.உடனடியாக அங்கிருந்து சக தொழிலாளர்களால் மீட்கப்பட்ட அபு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்ட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் தொடர்பாக தற்போது கடலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.