96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#கடலூர்: கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை; அலறித்துடித்த தொழிலாளி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு, அள்ளூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜமூர்த்தி. இவர் சொந்தமாக கலவை இயந்திரம் வைத்து கட்டிட தொழில் செய்து வருகிறார்.
துண்டான வலது கை
சம்பவத்தன்று சேத்தியாத்தோப்பு கடைவீதி பகுதியில் வேலைகள் நடைபெற்றுள்ளன. இவர் கடைவீதி பகுதியில் உள்ள வீட்டில் தனது இயந்திரத்தை வைத்து வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், இயந்திரம் இயக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்.! மூன்று வாகனங்கள் அடுத்தடுத்ததாக மோதி கோர விபத்து!!
மருத்துவமனையில் அனுமதி
இதனால் வலியால் அலறி துடித்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த விஷயம் தொடர்பாக சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ராஜமூர்த்தியின் மகன் சுந்தர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிரேன் சக்கரம் ஏறி-இறங்கி பயங்கர விபத்து; விசிக மகளிரணி செயலாளர் உடல் நசுங்கி பலி..!