#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிலிண்டர் விலையில் திடீர் மாற்றம்... அதிரடியாக விலையை குறைத்தது மத்திய அரசு..! பேரின்பத்தில் வணிகர்கள்..!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஏற்றத்துடன் இருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் இது பெரும் சிக்கலாக இருந்துவந்தது.
இந்த நிலையில், தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது ஒரு சிலிண்டருக்கு 187 ரூபாய் வீதம் குறைத்து தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 2186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 2373 ரூபாய் விற்கப்பட்ட நிலையில், தற்போது 187 ரூபாய் குறைக்கப்பட்டது வணிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்படாததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவைத்து குறிப்பிடத்தக்கது.