மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு: தினமும் ஒரு தேர்வு நடத்த உத்தரவு!. மாணவர்கள் அதிர்ச்சி!.
தினமும் ஒரு மாதிரித் தேர்வு நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நடந்த அன்றே விடைத்தாள்களை திருத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுத இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதனையடுத்து மார்ச் 1ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனால் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில், தினமும் பாடமாக மாதிரித் தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.