மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரையில் பரபரப்பு.! ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை! ஆசைஆசையாக சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்.!
மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் அன்புச்செல்வன்- ஜானகிஸ்ரீ தம்பதியினர். இவர்கள் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தங்களது 8 வயது மகள் மித்ராஸ்ரீ, 7 வயது மகள் ரக்ஷனாஸ்ரீ மற்றும் 4 வயது நிறைந்த உறவினர் குழந்தை தாரணி ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
அப்பொழுது அவர்கள் கோவில் அருகேயுள்ள குளிர்பான கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமை வாங்கி பார்த்துள்ளனர். ஐஸ்கிரீமுக்குள் தவளை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்தது குறித்து அன்புசெல்வம் போலீசில் புகார் அளித்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடையின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.