மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி போட்டதால்தான் விவேக் இறந்தாரா?? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்..
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நடிகர் விவேக் உயிரிழக்கவில்லை என மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாள் நடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக் உயிரிழந்ததாக வதந்திகள் பரவியது. ஆனால் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என அப்போதே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் விவேக் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து இந்த சம்பவம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணையும் நடந்துவந்தது.
இந்நிலையில், விவேக் மரணத்திற்கு உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள்தான் காரணம் என்றும், அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழவில்லை எனவும் மருத்துவ வல்லுநர் குழு தற்போது அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நடிகர் விவேக் உயிரிழக்கவில்லை... வல்லுநர் குழு#ActorVivek | #VivekDeath | #CoronaVaccine pic.twitter.com/6YsGtiDHcJ
— Polimer News (@polimernews) October 22, 2021