மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நாளை 5 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் மிக்ஜாங் புயலாக உருவானது.
இந்த புயல் நாளை (டிசம்பர் 05) ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. புயல் சென்னைக்கு அருகில் மையம்கொண்டு நகர்ந்து சென்றதால், புயல் மழை சென்னையை நேற்று முதலாக புரட்டியெடுத்தது.
இந்நிலையில், நாளை இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
படிப்படியாக தமிழகத்தில் நாளை இரவுக்கு மேல் மழை குறையலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.