மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம்... காவல்துறை தீவிர விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் 53 வயது உள்ள பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் லலிதா வயது 53. திருமணமான இவ்வாறு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வாழ்ந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது லலிதா இறந்திருக்கிறார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவரது மரணம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
லலிதா ஏதேனும் நோயின் காரணமாக இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அவரை யாரேனும் கொலை செய்து விட்டார்களா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.