மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி! ஊருக்கு செல்ல முன்பதிவு செய்யாதவர்களுக்கு மீண்டும் ஒரு அறியவாய்ப்பு!
இந்தவருடம் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் ஆரம் தேதி இந்திய முழுவதும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கான இரயில் முன்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பேரூந்துக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்வதற்காக பேருந்து முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதனை தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். இதனால் அன்றைய தினங்களில் போக்குவரத்துக்கு மிகவும் பாதிப்படையும். மேலும் பல பயணிகள் சோனா ஊர் செல்ல பேருந்து இல்லாமல் சிரமப்படுவது வழக்கம். இதனை சமாளிக்கவே தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன .
இந்தாண்டும் மொத்தமாக தீபாவளி சிறப்பு பேருந்துகளாக 20,567 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், சென்னையில் இருந்து 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 3, 4, 5 ஆகிய நாட்களில் மட்டும் செய்லபடும். கோயம்பேட்டில் 25 முன்பதிவு மையங்களும், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையமும் திறக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.