திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தண்ணீர் தேடி துள்ளி வந்த புள்ளி மான்கள்., உயிர் போன பரிதாபம்..!!
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட மானாமதுரை அருகே பல கிராமங்களில் உள்ளது. மேலும் அந்த கிராம காட்டுப் பகுதிகளில் புள்ளி மான்கள் உலவி வந்துள்ளது. அவ்வப்போது தண்ணீர் மற்றும் இரைதேடி நகர்ப்பகுதிக்கு வரும். அப்போது அங்குள்ள சாலை மற்றும் ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டி வரும்.
இந்த நிலையில் கிருங்காக்கோட்டை என்னும் இடத்தில் உள்ள ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இரு புள்ளி மான்கள் உயிரிழந்து உள்ளது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த இரு மான்களின் உடலை அங்கேயே பரிசோதித்து பின் அங்கேயே அடக்கம் செய்துள்ளார்.
மேலும் இதுபோன்று தண்ணிர் தேடி வருகின்ற மான்கள் ரயிலில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது என்றும் காட்டுப்பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் கண்மாய் பகுதியில் அதிக அளவு மான்கள் இருப்பதால் தண்ணீர் தேடி வருவதாக தெரிவித்த நிலையில், ஆங்காங்கே வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் வைத்து மான்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.