திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேறொரு பெண்ணிடம் தாவிய காதலன்: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!. காதலனை தண்டிக்க வேண்டாம் என வேண்டுகோள்..!
சென்னை, மாதவரம் அருகேயுள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சல் (23). இவர் கொளத்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச்சேர்ந்த கார் ஓட்டுநர் தனுஷ் எஎன்பவருடன்ஏஞ்சலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவது குடும்பத்திற்கும் சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இரண்டு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தனது காதலன் தனுஷிற்கு பைக் உள்ளிட்ட பல பொருட்களை ஏஞ்சல் வாங்கி காதல் பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக காதலர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனுஷ் நேற்று வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஏஞ்சலுக்கு அனுப்பி, அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த ஏஞ்சல், இது குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்த ஏஞ்சல், தனது காதலனின் செயலுக்காக அவரை தண்டிக்க வேண்டாம் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.