மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகன் இறந்ததால் விரக்தி: தம்பதியினர் செய்த காரியத்தால் பரிதாபமாக உயிரிழந்த மனைவி..!
கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி அருகேயுள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (50). இவரது மனைவி நந்தினி (45). இந்த தம்பதியினரின் மகன் ரவிகிருஷ்ணா (22). இவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பேரூர் அருகேயுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு ரவி கிருஷ்ணா தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.
ஓணம் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் நண்பர்களுடன் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, தென்னமநல்லூர் அருகே திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணா உள்ளிட்ட 3 இளைஞர்கள் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தங்களது ஒரே மகன் விபத்தில் பலியானதால் சஞ்சீவ் சங்கர் - நந்தினி தம்பதியினர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தனர்.
மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு வந்த நந்தினியின் உறவினர்கள், தம்பதியினர் இருவரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்ட அவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சங்சீவ் சங்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடவள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.