தயார் நிலையில் காவல்துறை; தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு



dgb-alerts-all-district-policemen

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 12வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நேற்று காலை அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளது என மருத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

karunanithi

இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி, டி.ஆர்.பாலு மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோர் முதல்வரை சந்தித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதனையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரை சந்திக்க செல்கிறார். இதனால் தமிழகத்தில் பரபரப்பாக  காணப்டுகிறது.

karunanithi

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான அறிக்கை இன்னும் 30 நிமிடத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் அணிவகுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் போலிசார்களை வரவழைத்து பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.