மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பச் சுமையை எடுத்துரைத்து தாய் கண்டித்ததால் ஆத்திரம்; 17 வயது சிறுவன் தற்கொலை.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், மேல்சவல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். சிறுவனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிடவே, ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் கோயம்புத்தூருக்கு சென்று கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.
மேலும் அவரது தாயும் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடந்த வாரம் வீட்டிற்கு வந்த சிறுவன் ஊரை சுற்ற வெளியில் சென்றுள்ளார். இதனால் அவரது தாய் கண்டிக்கவே, மனவேதனையடைந்த சிறுவன் பூச்சிமருந்து குடித்து உயிருக்கு போராடி இருக்கிறார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.