மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பர்களுடன் போட்டிபோட்டு சரக்கு.. கொடைக்கானல் குளிர் தாங்காமல் பொறியாளர் மரணம்.!
கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பொறியாளர், அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதால் உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள என்.வீ குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரேவந்த் (வயது 27). இவர் பொறியாளராக இருந்து வருகிறார். ரேவந்த் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், இவர்கள் அனைவரும் கூக்கால் ஏரிக்கு அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
அப்போது, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், கொடைக்கானல் சுற்றுலா வந்தவர்கள் மதுபானத்தை அளவுக்கு அதிகமாக குடித்துள்ளனர். அனைவரும் போதையில் உறங்கிவிட, காலையில் எழுந்து பார்த்தபோது ரேவந்த் காணவில்லை. அவரை தேடுகையில் குளியல் அறையில் இருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நட்புகள் ரேவந்த்தை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், ரேவந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியது மற்றும் கடுமையான குளிர் காரணமாக மூச்சு விட இயலாமல் ரேவந்த் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ரேவந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ரேவந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.