மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரோடு இருந்த முதியவருக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்.. எழுந்து வந்த நபரால் ஆடிப்போன குடும்பத்தினர்.!
வேலை விஷயமாக வெளியூருக்கு சென்ற முதியவருக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, பெரியகோட்டை பாறைப்பட்டியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 72). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார். இவர் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றால் 3 நாட்கள் கடந்து தான் வருவார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அவர் குறித்த தகவல் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்துள்ளார் என்று கூறி, அவர் பழனிசாமியா? என குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர்.
அந்த சடலத்தின் முகம் சிதைந்து இருந்ததால், உறவினர்கள் இது பழனிசாமியாக இருக்கலாம் என்று கூறி உடலை பெற்றுள்ளனர். பின்னர், வீட்டிற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது, பழனிச்சாமி வெளியூருக்கு சென்று வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரைக்கண்டு ஒருகணம் அதிர்ந்துபோன குடும்பத்தினர் பழனிசாமியிடம் விசாரிக்கையில், பக்கத்து ஊருக்கு வேலை விஷயமாக சென்ற காரணத்தால் தகவலை தெரிவிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார். இதனால் யாரின் சடலத்தை கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்தோம்? என குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.