மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பா அம்மா எங்களை தேடாதீங்க - கடிதம் எழுதிவைத்து தீபஒளி புதுத்துணியுடன் 2 பள்ளி மாணவிகள் மாயம்.. பெற்றோர்கள் தவிப்பு.!
தங்களை தேடவேண்டாம் என எழுதிவைத்து 2 பள்ளி மாணவிகள் வீட்டில் இருந்து வெளியேறிய சோகம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள், அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்கள். இருவரும் தோழிகள் ஆவார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் 2 மாணவிகளும் டியூசன் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் வீட்டிற்கு வரவில்லை. அவர்கள் தீபஒளிக்கு எடுத்த புதுத்துணிகளையும் தங்களுடன் எடுத்து சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் மாணவியின் தாய் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமிகளை தேடி வருகின்றனர். வீட்டில் நடந்த சோதனையில் மாணவிகள், "அம்மா அப்பா என்னை மன்னித்துவிடுங்கள், எங்களை தேடவேண்டாம்" என எழுதி வைத்துள்ளனர்.