மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொழிலதிபர் எரித்துக்கொலை?.. சாலையில் கிடந்த சடலம்..! திண்டுக்கல்லில் பயங்கர சம்பவம்.!
நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த தொழிலதிபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? வாகனத்தில் தீப்பற்றி சாலையில் விழுந்து உயிரிழந்தாரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், நத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தொழிலதிபர் பாலசுப்பிரமணி (வயது 45). இவர் வேடசந்தூரில் நிதி நிறுவனம் மற்றும் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
பின்னர், கூட்டம் நிறைவு பெற்றதும் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை நத்தம்பட்டி பகுதியில் இருக்கும் மண் சாலையில் பாலசுப்பிரமணி தலையில் பலத்த காயத்துடன் உடல் எரிந்த நிலையில் பிணமாக இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கூம்பூர் காவல் நிலைய அதிகாரிகள், பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.