96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மண் கொட்டியதால் தகராறு.. அண்டை வீட்டாரின் காதுகளை கடித்து துப்பிய பயங்கரம்.!
அண்டை வீட்டாரிடையே இருந்து வந்த சண்டையில், காதுகளை கடித்து துப்பிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், பூனை கவுண்டன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்த குமார். இவர் தனது வீட்டின் முன்பு மண் கொட்டி வைத்துள்ளார். ஆனந்த குமாரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் காந்தி ராஜன்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், ஆனந்த குமார் மண் கொட்டி வைத்தது இருவருக்கும் இடையே தகராறை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நேற்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்படவே வெறுப்படைந்த காந்திராஜன், ஆனந்தகுமாரின் வலதுபக்க காதினை கடித்து துப்பியுள்ளார். இதனையடுத்து, ஆனந்தகுமார் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மணல் கொட்டிய தகராறு ஏற்பட்டு அண்டை வீட்டாரின் காதுகளை தகராறில் கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.