96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மகனின் முதல் பிறந்தநாளை சிறப்பிக்க கேக்குடன் சென்ற தந்தை விபத்தில் மரணம்.!
வேடசந்தூர் அருகே ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாட கேக் உடன் சென்ற தந்தை, லாரி மோதிய விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி, புதுகுடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதியினர் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாட கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் கோவில் பகுதியில், எதிரே நூல் கண்டுகளை ஏற்றி வந்த லாரி, கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், கார்த்திக் செல்லும் வழியிலேயே தனது ஒரு வயது மகனுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாட கேட்கும் வாங்கி பயணித்த நிலையில், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடாமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேக்குடன் வந்த கார்த்திக்கை எதிர்பார்த்து காத்திருந்த அந்த மூன்று பிள்ளைகளும், கார்த்திக்கின் மனைவியும் கார்த்தியின் இறப்பு செய்தி கேட்டு துடித்துப் போயுள்ளனர்.