10 மாவட்டங்களில் முகாமிட்ட பேரிடர் மீட்பு படையினர்: கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழகம்..!



Disaster relief troops camped in 10 districts

தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் தீவுகளின் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.