திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் வலுக்கும் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் எது தெரியுமா?..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் இன்று (4.11.2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.