மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா?.. அரசு & தனியார் ஊழியர்கள் எதிர்பார்ப்பு..!!
தீபாவளிக்கு பொதுவிடுமுறையாக 4 நாட்கள் அறிவிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள மக்களால் பெரும்பான்மையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய இடத்தை தீபாவளி பெற்றுள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான தீபாவளி அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி சிறப்பிக்கப்பட உள்ளது.
வெளியூர்களில் பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் திரும்ப, அரசின் சார்பில் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மற்றும் சொந்த ஊர் சென்றவர்கள் பணிக்கு திரும்ப என சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதாவது அக்டோபர் 24-ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி என்பதால் அன்றைய நாள் விழாவை கொண்டாடிவிட்டு, 25-ஆம் தேதி ஊர் திரும்ப செவ்வாய்க்கிழமையும் சேர்த்து பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.