திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காலம் கடந்த விருது - விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கியது குறித்து மனம்திறந்த பிரேமலதா விஜயகாந்த்.!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி (வயது 47), புற்றுநோய் காரணமாக நேற்று இயற்கை எய்தினார். இவர் இளையராஜா இசையமைத்த பல படங்களில் பின்னணி குரலை பாடல்களுக்கு பதிவு செய்து இருக்கிறார். அவரின் மறைவு இளையராஜா மற்றும் அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பவதாரணியின் உடலுக்கு தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதற்கு முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் 30வது நாள் மறைவு தினத்தை முன்னிட்டு, அவர் சிறப்பு பூஜையும் செய்தார். நேற்று மறைந்த விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த விஷயம் குறித்து கருத்து பகிர்ந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த், "காலம் கடந்து காலன் எடுத்து சென்றபிறகு கிடைத்த விருது கௌரவமான விருது. இந்த விருது கேப்டன் இருந்த காலத்திலேயே கிடைத்திருந்தால், கேப்டனை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கும். கொண்டாடியிருப்போம். இப்போதும் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
அந்த விருதை உலக தமிழர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். மறைந்த பவதாரணி எங்களுக்கு திருமணமான நாட்கள் முதல் அறிமுகமானவர். அவரின் அன்னையும் அப்படிதான். அவர் என்னிடம் கைக்குழந்தையாக விளையாடி மகிழ்ந்தவர். அவரின் மறைவு வருத்தத்தை தருகிறது" என கூறினார்.