#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகன்களின் திருமணத்தை பார்க்கும் முன்பே மறைந்த விஜயகாந்த்; சோகத்திலும் சோகம்.!
தேமுதிக தலைவரும், பிரபல தமிழ் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth) இன்று தனது 71-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் மக்களுக்காக பல நலப்பணிகளை செய்த காரணத்தால், அவரின் மறைவு சொந்த வீட்டில் ஏற்பட்ட துக்கம்போல பலரின் மனதில் துக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அவரின் இறுதி காலகட்டத்தில் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டனர்.
இருவருக்கும் 30 வயதை கடந்தாலும் தற்போது வரை திருமணமாகவில்லை. மூத்த மகனான பிரபாகரனுக்கு தற்போது பெண் பார்க்கும் பணிகள் தொடங்கியிருந்த நிலையில், இவர்களின் திருமணத்தை பார்க்கும் முன்பே விஜயகாந்த் இயற்கை எழுதியுள்ளார்.