திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: திமுக அமைச்சர் எ.வ வேலு வீடு & அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை; அடுத்த பரபரப்பு.!
திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சருமானவர் எ.வ வேலு.
பாஜகவினர் வெளியிட்ட DMK Files ஊழல் தொடர்பான பட்டியலில், இவரின் பெயரும் பிரதானமாக இடம்பெற்று இருந்தது.
சமீபமாகவே திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை என்பது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று திமுக அமைச்சர் எ.வ வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் காலை முதலாக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.