மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்; சோகத்தில் திமுக.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தவர் புகழேந்தி. இவர் தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
இன்று காலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மறைவு திமுகவினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. கட்சியினர் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி 2019 விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக தொடர்ந்தார். தற்போது அவர் உயிரிழந்துள்ளதால், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாகி இருக்கிறது.