மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாதி பெயரை கூறி இழிவுபடுத்திய திமுக பிரமுகர்கள்.. களத்தில் இறங்கிய விசிக... தெருத்தெருவாக பகீர் போஸ்டர்..!
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தொகுதி, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற பட்டியல் இன தலைவர் செந்தில்குமார். இவர் திமுக கட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஏரி புதூர் வெங்கடேசன், கெங்கநல்லூர் கவுன்சிலர் மகாலிங்கம், திமுக மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கொலை மிரட்டல் வைத்துள்ளனர்.
மேலும் ஏரி மண் கொள்ளையடித்து வருவதை செந்தில்குமார் தட்டிகேட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிகேட்ட செந்தில்குமாரை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். கொலை செய்து ஏரியில் புதைத்துவிடுவோம் என்று மக்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தி இருக்கின்றனர்.
இதன் காரணமாக அவர்களின் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்குள்ள சுற்றுவட்டார குதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.