மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுகவினரின் ஆசை நிறைவேறுமா? பொறுப்பு தலைமை நீதிபதி முன்னிலையில் திமுகவின் மனு இன்று இரவு விசாரணை
தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கலைஞரின் உடல் அறிஞர் அண்ணா நினைவகம் அருகே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அணைத்து திமுகவினரின் விருப்பம். இதை நிறைவேற்றும் வகையில் திமுக MLAக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அனுமதி கோரினர். அதற்கு முதல்வர் "பாப்போம்" என பதிலளித்து அனுப்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விளியிட்டுள்ள அறிக்கையில், மரியா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே கலைஞரை அங்கே அடக்கம் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
அதற்கு பதிலாக சென்னையில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் முன்னிலையில் இன்று இரவு 10:30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.