மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உழைக்காதவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ பொறுப்பு.. விசுவாசமாக இருந்தால் எதுவும் கிடைக்காது - திமுக ஆர்.எஸ் பாரதி பகீர் பேச்சு.!
திமுகவின் அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.எஸ் பாரதி MP, உழைக்காதோருக்கு கட்சியில் பதவி & பொறுப்பு வழங்கப்படுவதாக கூறினார்.
சென்னையில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அமைப்பு செயலாளர் & நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "ஒரே கொடி, கட்சி என இருந்ததால் பதவி என்பது கிடைக்கவில்லை. உழைத்தோருக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்காருகிறார்கள்.
எங்களை போல உழைத்தவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி என பொறுப்பில் இருக்கிறார்கள். கட்சிக்கு ஒருவர் விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது. இதனை ஜீரணித்து கட்சியில் இருக்க வேண்டும்" என்று பேசினார்.