#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கி இருப்பார்... அதுவும் எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா...? பிரபாகரன் குறித்து சீமான் ஆவேசம்...!
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக இன்று கூறினார். தமிழகத்தில் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் இருக்கிறார். அவருடன் தொடர்பில்தான் இருக்கிறோம். அவரின் மனைவி மற்றும் மகளும் நலமுடன் இருக்கின்றனர். உரிய நேரத்தில் மக்கள் முன் அவர் வருவார். பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தற்போது அறிவிக்க முடியாது என்று கூறினார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, பழ.நெடுமாறனின் கருத்துக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான்,
என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று நின்று வீரமாக சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன். எங்கள் அண்ணன் பிரபாகரன் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல.
போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி இருப்பார், அதுவும் எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அண்ணன் பிரபாகரன் சொல்லிவிட்டு வருவபர் அல்ல வந்துவிட்டு சொல்வார். அது தான் அவருக்கு பழக்கம் அவரை அறிந்தவர்கள் இதை நன்கு அறிவார்கள்.
தலைவர் பிரபாகரன், சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர். அதனால் தேவையின்றி குழப்பிக்கொண்டிருக்கவேண்டியதல்ல. பிரபாகரன் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று பழநெடுமாறன் கூறுகிறார். அன்பழகன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒருநாள் நேரில் வந்துவிட்டால், வந்தவுடன் பேசுவோம் என்று கூறினார்.