மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனின் இறப்புச் சான்றிதழ் வேண்டுமா.. அப்போ என் பாலியல் இச்சையை தீர்த்து வை.. இருளர் இன பெண்ணிடம் ஆபாசமாக பேசிய VAO..!
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுக்கா நல்லபாளையத்தில் உள்ள இருளர் பாளையம் பகுதியில் வசித்து வரும் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் சங்கீதா. இவரது கணவர் அய்யனார் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இவர்களுக்கு 11 வயதில் கமலேஷ் என்ற மகன் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் நல்லபாளையம் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான ஆரோக்கியதாஸிடம் தனது கணவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு சங்கீதா கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5000 ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறி சங்கீதா ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் சங்கீதாவின் போன் நம்பரையும் கேட்டு வாங்கியுள்ளார்.
இதனையடுத்து இரவு நேரங்களில் சங்கீதாவின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து உன் கணவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி விட்டேன் என்றும் அதனுடன் விதவைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் உனக்கு பெற்று தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இவையெல்லாம் உனக்கு வேண்டும் என்றால் என் பாலியல் இச்சைக்கு அடிமையாக வேண்டும் என்று தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன சங்கீதா விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் நல்லபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் செல்போனில் சங்கீதாவிடம் பாலில் இச்சைக்கு அடிமையாக வேண்டும் என்று கூறிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.