திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுற்றுலா சென்ற பள்ளி மாணவி கர்ப்பம்.. கருக்கலைப்பு செய்த மருத்துவர் கைது!
நீலகிரியில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவி கர்ப்பமாகிய நிலையில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி பள்ளி சுற்றுலாவிற்கு சென்று வந்துள்ளார்.
அதன் பின்னர் அடுத்த சில நாட்களில் மாணவிக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவியிடம் விசாரித்த போது, சுற்றுலா சென்ற போது சக மாணவர் ஒருவருடன் மாணவி உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதை மறைத்து கூடலூரில் உள்ள நரேந்திர பாபு என்ற மருத்துவரிடம் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிய வந்த நிலையில் போலீசார் மருத்துவர் நரேந்திர பாபுவை கைது செய்து, அவரது மருத்துவமனை மற்றும் மருந்தகத்திற்கும் சீல் வைத்தனர். மேலும் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவரையும் கைது செய்துள்ளனர்.