பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருநங்கையாக மாறிய மகன் இறந்ததில் சந்தேகம்.... திருநங்கைகள் பெற்றோரை முற்றுகையிட்டு போராட்டம்...!
திருப்பத்தூர் அருகே திருநங்கை இறந்ததற்கு அவரின் உறவினர்கள் தான் காரணம் எனக்கூறி திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளம் பகுதியில் வசித்து வந்த சுந்தரமூர்த்தியின் மகனான சந்துரு(19), திருநங்கையாக (சந்ரிகா)ஒரு வருடத்திற்கு முன்பு மாறியுள்ளார். திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்தது.
திருநங்கை சந்திரிகாவின் தாய் தெய்வானையின் சகோதரியான முனீஸ்வரி என்பவரது வீடு குருசிலாப்பட்டில் உள்ளது. பண்டிகையை காண முனீஸ்வரி வீட்டிற்கு சந்திரிகா சென்றுள்ளார். அப்போது திடீரென சந்திரிகா கானாமல் போனார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன சந்திரிகா நேற்று மர்மமான முறையில் குரிசிலாபட்டு பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்திரிகாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்திரிகா இறந்து கிடந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகின்றனர்.
சந்திரிகா இழந்ததை அறிந்த திருநங்கைகள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சந்திரிகாவின் உறவினர்களை முற்றுகையிட்டு, சந்திரிகாவின் இறப்பிற்கு நீங்கள் தான் காரணம் என்றும், உங்க வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் என்று கேள்வி எழுப்பினார்.
சந்திரிகாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சொல்லி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், குரிசிலாப்பட்டு காவல்துறையினர் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.