#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதைக்காக இருமல் மருந்து சப்ளை.. மெடிக்கல் ஓனர் கைது.!
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் போதைக்காக இருமல் மருந்தை பயன்படுத்துவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் உள்ள ஒரு மெடிக்கலில் இளைஞர்கள் அதிக அளவில் இருமல் மருந்து வாங்கி செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த மெடிக்கலில் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் அசோகனை விசாரணை செய்ததில் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்தை சட்டவிரோதமாக போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடையில் இருந்த 150 இருமல் மருந்தில் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மருந்து கடை உரிமையாளர் அசோகனை கைது செய்து நீதிமன்றத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.