திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு கடைக்காரரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!
சென்னை பாடி குமரன் நகர் பகுதியில் சிவா என்பவர் சிக்கன் பக்கோடா நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தனது கடையில் சிக்கன் பக்கோடா செய்வதற்கான வேலைகளை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு மது பாதையில் வந்த இளைஞர் ஒருவர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் சிவா பக்கோடா தர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து சிவாவின் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
என்ன சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, சிவாவை கத்தியால் குத்திய போதை ஆசாமி உதயகுமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.