மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் வீட்டிற்குள் காரை விட்ட போதைஆசாமி.. போலீசார் நடவடிக்கை!
ராசிபுரம் அருகே மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வீட்டில் சுற்று சுவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 29 வயதான சரத்குமார் என்ற இளைஞர் தாமரைக்கண்ணனிடமிருந்து வாடகைக்கு கார் எடுத்து சென்றுள்ளார்.
இதில், சரத்குமார் மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது சாலை வளைவில் அதிவேகமாக காரைத் திருப்பிய சரத்குமார் கட்டுப்பாட்டை இழந்து முருகேசன் என்பவரது வீட்டுக்குள் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. மேலும் வெளியே படுத்திருந்த முருகேசன் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய சரத்குமார் சம்பவ இடத்திலிருந்து காரை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து ராசிபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சரத்குமாரை தேடி வருகின்றனர்.