மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை இல்லாததால் மனைவியை அடித்து கொன்ற கொடூர கணவன்!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மாமா குடி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தம்பதியினருக்கு தற்போது வரை குழந்தை இல்லை.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குழந்தை இல்லாததால் மன விரக்தியில் இருந்த கேசவன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கணேசன், மனைவி மகாலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணேசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மகாலட்சுமி ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனிடையே மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மகாலட்சுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.