#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எடுடா வண்டிய..! குடிமகன் கண்ணாடியை பிடித்தபடி நகர்ந்த பேருந்து.. வைரல் வீடியோ காட்சி..
தென்காசி அருகே ஓடும் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை பிடித்துக்கொண்டு பயணம் செய்த மதுபிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்காசி மாவட்டம் கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்தநிலையில், அங்கு தனது வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு போதை தலைக்கேறிய நிலையில், உச்சக்கட்ட போதையுடன் எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது அவர் சென்ற பேருந்து கரும்புளியூத்து கிராமத்தில் நிற்காது என கூறி நடத்துநர் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காளிமுத்து பேருந்தின் முன் பக்கம் வந்து நின்றுகொண்டு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை கெட்ட வார்த்தைகளில் திட்டியதோடு, பேருந்தை அங்கிருந்து எடுக்காவிட்டால் தடுத்துள்ளார்.
தொடர்ந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடிக்கு முன் காளிமுத்து ஏறி நிற்கவே, அவரை பயமுறுத்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை சில அடி தூரம் இயக்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.