கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது; துக்ளக் இதழ் ஆசிரியர் அளிக்கும் விளக்கம்



duklak-reporter-about-memorial-in-marina

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

funeral at Marina

கலைஞரின் உடலை அறிஞர் அண்ணா நினைவகம் அருகே அடக்கம் செய்யப்பட அனுமதி கோரிய மனுவை நிராகரித்த ஆளும் கட்சி சென்னையில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக நேற்று இரவு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியிடப்படும் என நீதிபதிகள் கூறிவிட்டனர். 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். 

funeral at Marina

அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது. இந்த விஷயத்தை திமுகவினர் தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது. அவருக்கு மெரினாவில் இடமளிப்பது நடைமுறையில் இல்லை. மெரினாவில் முதல்வராக இருக்கும் போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதிக்கு அங்கு இடமளிக்க முடியாது. முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபத்திலேயே இடமளிக்கப்படுவது வழக்கம். காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு மெரினாவில் இடமளிக்கப்படவில்லை. அதனால் கருணாநிதிக்கும் மெரினாவில் இடமளிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.