கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் புழு! அதிர்ச்சியடைந்த கணவர்!



dust in glucose bottle

ஒடிஸாவைச் சோ்ந்தவா் ஜெகன்(28). இவரது மனைவி தேவி (24). இந்த தம்பதியினர் திருப்பூர் அருகே பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவரும் கேரளத்தைச் சோ்ந்த ஜோசப் என்பவரது உணவகத்தில் பணியாற்றி வருகின்றனா். ஜெகனின் மனைவி தேவி மூன்று மாத கா்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தேவிக்கு திடீரென தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து தேவியை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு  அழைத்துச்சென்றுள்ளார் ஜெகன். அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தேவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு மற்றும் பஞ்சு போன்றவை இருப்பதை கண்டு ஜெகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

glucose

 அதிர்ச்சியடைந்த ஜெகன் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குளுக்கோஸ் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து ஆரம்ப சுகாதார மையத்துக்கு வந்து சோதனை செய்தமருத்துவத் துறை அதிகாரி மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், விசாரணைக்கு பிறகு துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். குளுக்கோஸ் பாட்டிலில் புழு இருந்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.