ப்ளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவியருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!



Edappadi Palaniswami congratulated the 12th class students who are going to write the public examination.

பொதுத்தேர்வு எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று தொடங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு  எழுதவிருக்கும் அன்பிற்கினிய மாணவ, மாணவிகள், நம்பிக்கையுடனும்-சிரத்தையுடனும் , அச்சமில்லாமலும் தேர்வை எதிர் கொண்டு, அனைவரும் வெற்றி பெற்று உங்கள் எதிர்காலம் செழிப்புற உளமாற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.