ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
திமுக அரசை குறை கூறவே எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.... அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்...!!
திமுக அரசை குறை கூறவே எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரும்பு கொள்முதல் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
கரும்பு கொல்முதலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெருவதாகவும், தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே வழங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு கூட்டுறவுதுறை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம் போல் திமுக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
கரும்பு வழங்க அதிமுக ஆட்சியில் வெளியிட்ட அரசாணைகளை இபிஎஸ் முழுமையாகப் படித்தோ அல்லது படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், அது பற்றி அறியாமல் அறிக்கை வெளியிடலாமா என அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021-ஆம் வருடத்தில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது, பொங்கலுக்கு கொள்முதல் செய்த கரும்புக்கு 30 ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த வருடம் பொங்கலுக்கு கொள்முதல் செய்த கரும்பிற்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.
இது அதிமுக அரசு அறிவித்த கொள்முதல் விலையை விட இது 10 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023-ஆம் வருடம் பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள முழு நீளக் கரும்பிற்கும் அரசால் 33 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும், விவசாயிகளுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது என்றும், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கரும்புக்கான தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது போன்ற தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன என்று அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.