#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
8 வயது சிறுமி தொடர் பாலியல் துன்புறுத்தல்... 12-ம் வகுப்பு மாணவன் மீது பாய்ந்த போக்சோ.!
வேலூர் மாவட்டத்தில் எட்டு வயது சிறுமிக்கு தொடர்பு பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவகாரத்தில் பிளஸ் டூ மாணவன் கைது செய்யப்பட்டு சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சார்ந்த 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்காம் வகுப்பு செல்ல இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர் அவரது பெற்றோர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய தகவல் சிறுமியின் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
சிறுமியை தொடர்பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் மனம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை செய்த போது எதிர் வீட்டில் இருக்கும் பிளஸ் டூ மாணவன் கடந்த மூன்று மாத காலமாக சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவனுக்கு எதிராக புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் அந்த பிளஸ் டூ மாணவன் 18 வயது எட்டாததால் குடியாத்தம் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். சிறுமிக்கு தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.