53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
திருச்சியில் பயங்கரம்... 3,000 ரூபாய்க்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூதாட்டி... இளைஞர் வெறி செயல்.!!
திருச்சி மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 35 வயதுடைய வாலிபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காவல் நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம், வள்ளுவர் நகரில் தனபாக்கியம் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரை காணவில்லை என்று தனபாக்கியத்தின் உறவினரான ராஜேந்திரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மூதாட்டியை தீவிரமாக தேடி வந்தனர்.
சிக்கிய குற்றவாளி
தனபாக்கியம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் கடந்த செப்டம்பர் நான்காம் தேதி தனபாக்கியத்தை அவரது உறவினரான ஹரிஹரசுதன் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் இருந்த ஹரிஹரசுதனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். இந்த விசாரணையில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ் 1 மாணவி பலாத்காரம்... 24 வயது இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!
கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த ஹரிஹரசுதன், தனபாக்கியத்திடம் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக தெரிவித்தார். மேலும் பொது இடங்களில் வைத்து ஹரிஹரசுதனிடம் கடனை திருப்பித் தருமாறு தனபாக்கியம் கேட்டிருக்கிறார். மேலும் ஹரிஹரசுதனை தகாத வார்த்தைகளாலும் மூதாட்டி திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரசுதன் மூதாட்டிக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத முட்புதருக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனபாக்கியம் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றதாக தெரிவித்தார். மேலும் தனபாக்கியத்தின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
உடலை கைப்பற்றிய காவல் துறை
இதனைத் தொடர்ந்து வாய்க்காலில் வீசப்பட்ட உடலை காவல்துறையினர் மீட்டனர். உடல் உருக்குலைந்து எலும்பு கூடாக இருந்தது. இந்த உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறை அனுப்பி வைத்தது. மேலும் தனபாக்கியத்தை கொன்ற ஹரிஹரசுதன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் சோகம்... 17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு... எமனாக வந்த காதல்.!!