#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அச்சோ பாவமே..." குடும்ப பிரச்சினை மற்றும் வேலையில்லாத விரக்தி... பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்.!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையின் விசாரணையில் இறந்த நபர் சென்னையில் அடுத்த அரக்கோணத்தை சேர்ந்த விஜய் என்று தெரிய வந்திருக்கிறது . எம்இ பட்டதாரியான இவர் நேர்காணலில் கலந்து கொள்வதற்காக சென்னை நங்கநல்லூரில் தங்கி இருந்திருக்கிறார். இவருக்கு கடந்த வருடம் திருமணமாகி ஒரு வாரத்திலேயே மணக்க சப்பு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
குடும்ப பிரச்சினை மற்றும் வேலையில்லாத விரக்தி ஆகியவற்றால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.